உபயோகமற்ற இயந்திர உதிரி பாகங்களில் கலைச் சிற்பங்கள்
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உபயோகமற்ற இயந்திர உதிரி பாகங்களில் இருந்து உருவாக்கப்பட்ட 7 கலைச் சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உபயோகமற்ற இயந்திர உதிரி பாகங்களில் இருந்து உருவாக்கப்பட்ட 7 கலைச் சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஐ.சி.எஃப் தொழிற்சாலை)யில் கிடைத்த உபயோகமற்ற இயந்திர உதிரிபாகங்கள், இரும்பு கழிவுப் பொருள்களில் இருந்து 7 கலைச் சிற்பங்கள் உருவாக்கப்பட்டன. செழியன் என்பவரால் உருவாக்கப்பட்ட தமிழ் யாழினி சிற்பம்' , சைலேஷ் என்பவரால் உருவாக்கப்பட்ட பறவை', இளங்கோ என்பவரால் உருவாக்கப்பட்ட கடல் பயணம் ' என்ற சிற்பம் உள்பட 7 சிற்பங்கள் ஐ.சி.எஃப் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தன.
இச்சிற்பங்களை ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் பார்வையிடுவதற்கு வசதியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கண்காட்சிக்கு வைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, இந்த 7 சிற்பங்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. கண்காட்சியை சென்னை ரயில்வே கோட்ட பொது மேலாளர் நவீன்குலாத்தி தொடங்கி வைத்துப் பேசியது:
பயணிகளுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் இக் கண்காட்சி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்த கண்காட்சி ஒரு மாதத்துக்கு நடைபெறும். உபயோகமற்ற இயந்திர உதிரிபாகங்கள், இரும்பு கழிவுகளில் இருந்து இத்தகைய அழகான சிற்பங்கள் உருவாக்கியது வியப்பான விஷயம். உபயோகமற்ற இயந்திர உதிரிபாகங்களில் இருந்து சிற்பங்கள் உருவாக்கியது மூலம் கலைத்துறையில் சாதிக்க முடியும் என்று வெளிப்படுத்தியுள்ளனர் என்றார் அவர். நிகழ்ச்சியில், ஐ.சி.எஃப் தலைமை இயந்திரவியல் பொறியாளர் சைபல் குமார் போஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.