FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஈரோட்டில் மீட்கப்பட்ட கொத்தடிமை தம்பதி: உறவினர்களிடம் ஒப்படைப்பு

ஈரோடு மாவட்டத்திலிருந்து மீட்கப்பட்ட கொத்தடிமை தம்பதி, நாகை மாவட்டத்தில் உள்ள அவர்களது சொந்த ஊரில் உறவினர்களிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டனர். 

30 ஜனவரி 2024, 6:30 pm IST
ஈரோடு மாவட்டத்தில் மீட்கப்பட்டு சொந்த ஊரான நெப்பத்தூருக்கு வந்து சேர்ந்த கொத்தடிமை தம்பதி சம்பந்தம் - லட்சுமி. உடன் வட்டாட்சியர் பாலமுருகன் உள்ளிட்டோர். 
பகிர்:

ஈரோடு மாவட்டத்திலிருந்து மீட்கப்பட்ட கொத்தடிமை தம்பதி, நாகை மாவட்டத்தில் உள்ள அவர்களது சொந்த ஊரில் உறவினர்களிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டனர். 
நாகை மாவட்டம், திருவெண்காடு அருகேயுள்ள நெப்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பந்தம் (60). இவரது மனைவி லட்சுமி (55) . இருவரும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள புங்கா கிராமத்தில் வெங்கடாசலம் என்பவரது செங்கல் சூளைக்கு வேலைக்குச் சென்று அங்கேயே கொத்தடிமையாக வேலை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர்கள் அந்த செங்கல் சூளையில் திடீர் ஆய்வு செய்தபோது சம்பந்தம் - லட்சுமி தம்பதி கடந்த 20 ஆண்டுகளாக கொத்தடிமையாக இருந்து வருவது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் ஈரோடு மாவட்ட வருவாய்த் துறை அலுவலர்கள் மீட்டு நாகை மாவட்டம் நெப்பத்தூருக்கு அனுப்பி வைத்தனர். புதன்கிழமை ரயில் மூலம் மயிலாடுதுறை வந்த தம்பதியை, நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமாரின் உத்தரவின் பேரில், சீர்காழி வட்டாட்சியர் பாலமுருகன் அழைத்துச் சென்று அவர்களின் சொந்த ஊரான நெப்பத்தூரில் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். 
கொத்தடிமையிலிருந்து மீண்டு வந்த அந்த தம்பதிக்கு, அரசு மற்றும் வங்கி மூலம் தொழில் தொடங்க கடன் மற்றும் உதவித்தொகை பெற்றுத் தருவதாக வட்டாட்சியர் பாலமுருகன் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments