FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

30 ஜனவரி 2024, 6:30 pm IST
பகிர்:

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இம்மையத்தின் அதிகாரி புதன்கிழமை கூறியது:
வெப்பச் சலனம் காரணமாக வட தமிழகம் மற்றும் தென்தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது. ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் காணப்படும்.
கோவிலன்குளத்தில் 120 மி.மீ. மழை: தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் விருதுநகர் மாவட்டத்தில் கோவிலன்குளத்தில் 120 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சியில் 110 மி.மீ., மதுரை மாவட்டம் சிட்டாம்பட்டியில் 100 மி.மீ., மேலூரில் 90 மி.மீ., மேட்டுபட்டியில் 70 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது.
வெப்பநிலையை பொருத்தவரை, அதிகபட்சமாக 102 டிகிரி முதல் 107 டிகிரி வரை பதிவாக வாய்ப்புள்ளது. குறிப்பாக, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கரூர், திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் அதிக வெப்பநிலை காணப்படும் என்றார் அவர்.
திருத்தணியில் 103 டிகிரி வெயில்: கோடை மழை காரணமாக, பல மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக வெப்பநிலை குறைந்து காணப்படுகிறது. இதே நிலை புதன்கிழமையும் காணப்பட்டது. புதன்கிழமை அதிகபட்சமாக திருத்தணியில் 103 டிகிரி வெப்பநிலை பதிவானது. சென்னை விமான நிலையத்தில் 100 டிகிரியும், வேலூரில் 99 டிகிரியும், திருச்சி, கரூர்பரமத்தியில் தலா 98 டிகிரியும் வெப்பநிலை பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments