FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக மேல்முறையீடு

11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு புதன்கிழமை

30 ஜனவரி 2024, 6:30 pm IST
பகிர்:

11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. 
கடந்த ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தற்போதைய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் க. பாண்டியராஜன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர். நட்ராஜ், எஸ். செம்மலை, எஸ்.பி. சண்முகநாதன், என். மனோரஞ்சிதம், எஸ்.எஸ். சரவணன், வி.சி. ஆறுக்குட்டி, ஓ.கே. சின்னராஜ், கே. மாணிக்கம், 
ஏ. மனோகரன் ஆகியே 11 பேரும் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர். 
இவர்கள் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக கொறடா சக்கரபாணியும், இதே கோரிக்கையை வலியுறுத்தி 
தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் வெற்றிச்செல்வன், தங்கத்தமிழ்ச் செல்வன், ரங்கசாமி, பார்த்திபன் ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. 
இது தொடர்பாக அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்புத் தேதி குறிப்பிடாமல் கடந்த மார்ச் 7-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு ஏப்ரல் 27-ஆம் தேதி அளித்தது. அதில், '11 சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பேரவைத் தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது' எனத் தெரிவித்து, தகுதி நீக்கம் செய்யக் கோரிய அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தது. 
இந்நிலையில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு கடந்த மே 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே, '11 சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பேரவைத் தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது' என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments