FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் கொடுங்குற்றம், பட்டா தர உத்தரவிட முடியாது: உயர் நீதிமன்றம்

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் கொடுங்குற்றம், ஆக்கிரமித்த நிலங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:


சென்னை: நீர்நிலை ஆக்கிரமிப்புகள் கொடுங்குற்றம், ஆக்கிரமித்த நிலங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அயனாவரத்தில் குளத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியவர்கள், தங்களது நிலங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நீர்நிலை ஆக்கிரமிப்பு கொடுங்குற்றம். நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்பு இடங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட முடியாது என்று தெரிவித்து உள்ளனர்.

Advertisement

Advertisement

மேலும், நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் குறித்து 2 வாரத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தி 8 வாரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது குறித்து 12 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். 

ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகள் மீது சென்னை ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலை அக்கிரமிப்புகளை அகற்றுவதுதான் அதிகாரிகளின் முக்கிய வேலை என்று நீதிபதி குறிப்பிட்டார். 

மேலும், வெள்ளம் ஏற்படும் போது, நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்கக் கூடாது என்றும் வருவாய்த் துறை செயலருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments