FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு ஜாமீன்

இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வியாழக்கிழமை ஜாமீன் வழங்கியது. 

30 ஜனவரி 2024, 10:12 pm IST
சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸாரால் அழைத்துவரப்பட்ட மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி.
பகிர்:


இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வியாழக்கிழமை ஜாமீன் வழங்கியது. 
நாகை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள பெருந்தோட்டம் கிராமத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசினார். அப்போது, இந்திய ஒருமைப்பாட்டுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும், இரு சமூகத்தினரிடையே பிரச்னையை தூண்டும் வகையிலும் பேசியதாக, அவர் மீது திருவெண்காடு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு, சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. இதற்காக, வேலூர் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருமுருகன் காந்தி சீர்காழிக்கு அழைத்துவரப்பட்டு, குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது திருமுருகன் காந்திக்கு, ஜாமீன் வழங்கி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி யுவராஜ் உத்தரவிட்டார்.
பின்னர், நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த திருமுருகன்காந்தி, செய்தியாளர்களிடம் கூறும்போது, ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளான பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் 161-ஆவது சட்டப் பிரிவின்கீழ் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்றும், பாஜகவுக்கு எதிராக கோஷம் எழுப்பிய மாணவி சோபியா மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும்' என்றும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments