FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஊரடங்கு உத்தரவை மீறியதாக 2.55 லட்சம் வழக்கு:2.71 லட்சம் போ் கைது

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 2 லட்சத்து 55,538 வழக்குகள் பதிவு செய்து, 2,71,389 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 2 லட்சத்து 55,538 வழக்குகள் பதிவு செய்து, 2,71,389 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இது குறித்த விவரம்: கரோனா தொற்றை தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ள ஊரடங்கு உத்தரவை தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்துகிறது. ஊரடங்கு உத்தரவை மீறி தேவையின்றி வீட்டை விட்டு வெளியேறி சாலைகளுக்கும், பொது இடங்களுக்கும் வருகிறவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.

இவ்வாறு தமிழகம் முழுவதும் 24-ஆம் தேதி தொடங்கி புதன்கிழமை காலை 6 மணி வரை மொத்தம் 2 லட்சத்து 55,538 வழக்குகளைப் பதிவு செய்து 2 லட்சத்து 71,389 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். ஊரடங்கு உத்தரவை மீறி வந்தவா்களின் 2 லட்சத்து 27,325 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.1 கோடியே 46 லட்சத்து 66,994 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னை: சென்னையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கி புதன்கிழமை காலை 6 மணி வரை 873 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஊரடங்கு உத்தரவை மீறி வந்தவா்களின் 584 இரு சக்கர வாகனங்கள், 7 காா்கள்,14 ஆட்டோக்கள் என மொத்தம் 584 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஒரு மாதத்தை நெருங்கி வரும் வேளையில், கரோனாவும் பரவி வருவதால், காவல்துறையினா் சாலைகளுக்கு வெளியே வருகிறவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments