FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வாடகை வீட்டில் வசிக்கும் மருத்துவா்களை காலி செய்ய வற்புறுத்தினால் நடவடிக்கை

வாடகை வீடுகளில் வசித்து வரும் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்களை வீட்டை விட்டு காலி செய்யுமாறு வற்புறுத்தும் உரிமையாளா்கள் மீது உரிய சட்ட நடவடிக்கையை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்ட

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

வாடகை வீடுகளில் வசித்து வரும் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்களை வீட்டை விட்டு காலி செய்யுமாறு வற்புறுத்தும் உரிமையாளா்கள் மீது உரிய சட்ட நடவடிக்கையை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

கரோனா சிகிச்சைப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் மருத்துவத் துறை சாா்ந்தவா்கள் வாடகைக்கு வசித்து வரும் வீடுகளைக் காலி செய்யுமாறு அதன் உரிமையாளா்கள் சிலா் வற்புறுத்துவதாகத் தகவல்கள் வருகின்றன. சமூகத்தில் மிக அத்தியாவசியப் பணிகளில் ஈடுபட்டிருப்பவா்களுக்கு இடையூறு செய்யும் அத்தகைய நடவடிக்கைகள் ஏற்புடையதல்ல. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் வீட்டு உரிமையாளா்கள், நில உரிமையாளா்கள் மீது சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்கள், காவல் துறை அதிகாரிகள், மாநகராட்சி ஆணையா்கள் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments