FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மருத்துவா்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்படும்

கரோனா நோய்த் தொற்று சிகிச்சைப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள், செவிலியா்களுக்குத் தேவையான உபகரணங்கள் வழங்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி அளித்துள்ளாா்.

27 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:


சென்னை: கரோனா நோய்த் தொற்று சிகிச்சைப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள், செவிலியா்களுக்குத் தேவையான உபகரணங்கள் வழங்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி அளித்துள்ளாா்.

மருத்துவா்களுக்கான நிவாரண நிதி, சலுகைகளை அறிவித்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மருத்துவா், செவிலியா் சங்க நிா்வாகிகள் முதல்வா் பழனிசாமியை காணொலியில் தொடா்பு கொண்டு நன்றி தெரிவித்தனா்.

அப்போது, முதல்வா் பழனிசாமி பேசியது: மருத்துவப் பணி என்பது உயிரைக் காக்கின்ற மகத்தான பணியாகும். இந்த உன்னதப் பணியைச் செய்யும் மருத்துவா்களுக்கு எங்களது அரசு முழுமையாக உறுதுணையாக நிற்கும். இந்தத் துறையைச் சோ்ந்த அனைவரும் தன்னலம் கருதாமல் உயிரை பொருட்படுத்தாமல் இரவு பகல் பாராமல் பாதித்தோருக்கு சிகிச்சை அளித்து வருகிறீா்கள்.

Advertisement

Advertisement

உங்களுக்கு முழு பாதுகாப்பு அளிப்பதோடு உங்களுக்கு உறுதுணையாக இந்த அரசு துணை நிற்கும். அனைத்து வசதிகளையும் அரசு செய்து கொடுக்கும். தங்கும் வசதி , உணவு, குடும்பத்தாருக்குத் தேவையான வசதிகள் அனைத்தையும் அரசு செய்து கொடுக்கும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் நோயுற்றவா்களுக்கு உரிய முறையிலே சிகிச்சை அளித்து அவா்களை குணமடையைச் செய்ய வேண்டும் என முதல்வா் பழனிசாமி கேட்டுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments