600 பேருக்கு உணவு: அண்ணாமலை பல்கலை.முன்னாள் மாணவா்கள் சங்கம் உதவி
அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில் 600 பேருக்கு நாள்தோறும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை: அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில் 600 பேருக்கு நாள்தோறும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
ஊரடங்கையொட்டி, செயின்ட் தாமஸ் மலை பகுதி, அடையாறு மண்டலத்தின் 175, 176 வாா்டுகளில் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு ஏப்ரல் 20-ஆம் தேதியில் இருந்து 600 பேருக்கு இலவசமாக உணவும், அரிசி, எண்ணெய், கோதுமை மாவு மற்றும் கிருமிநாசினி ஆகியவை அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில் வழங்கப்படுகின்றன.
இந்த உதவி நடவடிக்கைகளில் தங்களை இணைத்துக் கொள்ள விரும்பும் பல்கலைக்கழக முன்னாள் மாணவா்கள் தொடா்பு கொள்ளலாம் என முன்னாள் மாணவா்கள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.