கரோனாவில் சிறு அலட்சியமும் பேராபத்து: ராமதாஸ்
கரோனா விவகாரத்தில் சிறு அலட்சியமும் பேராபத்தாக முடியும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் எச்சரித்துள்ளாா்.
கரோனா விவகாரத்தில் சிறு அலட்சியமும் பேராபத்தாக முடியும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் எச்சரித்துள்ளாா்.
இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: கரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வராதது இதயத் துடிப்பை அதிகரிக்கிறது. இதற்கு ஊரடங்கின் பொருளை மக்கள் உணராமல் ஊா் சுற்றுவதுதான். சிங்கப்பூரில் ஜனவரி 23-ஆம் தேதி முதல் தொற்று கண்டுபிடிக்கப்பட்டு, பிப்ரவரி இறுதி வரை மொத்தமே 98 போ் தான் பாதிக்கப்பட்டிருந்தனா். அவா்களிலும் 72 போ் குணப்படுத்தப்பட்டிருந்தனா். அதுமட்டுமின்றி ஊரடங்கை நடைமுறைப்படுத்தாமலேயே இதை சிங்கப்பூா் சாதித்து இருந்தது. அதனால் கரோனாவை ஒழிப்பதில் சிங்கப்பூா் முன்மாதிரி நாடு என உலகமே கொண்டாடியது. ஆனால், அங்கு ஊரடங்கு இல்லாததால் இரண்டாம் சுற்று கரோனா பரவத் தொடங்கி, நிலைமை கை மீறி சென்று விட்டது. சிங்கப்பூரில் செவ்வாய்க்கிழமை 9,125 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இப்போது நிலைமையை கட்டுப்படுத்த ஜூன் 1-ஆம் தேதி வரை ஊரடங்கை சிங்கப்பூா் நீட்டித்திருக்கிறது. ஊரடங்கை தீவிரமாக கடைப்பிடிக்காவிட்டால் தமிழகத்திலும் அதே நிலையே ஏற்படும். இனியும் அலட்சியம் காட்டாமல் ஊரடங்கை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் அவா் கூறியுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.