FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விழுப்புரம்: கைக்குழந்தையுடன் நடந்துவந்த பெண்ணை காரில் அனுப்பி வைத்த காவலர் 

புதுவை மதகடிப்பட்டு மருத்துவமனையிலிருந்து, கைக்குழந்தையுடன் நடந்துவந்த கள்ளக்குறிச்சியைச்

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

புதுவை மதகடிப்பட்டு மருத்துவமனையிலிருந்து, கைக்குழந்தையுடன் நடந்துவந்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 35 வயது பெண்ணை, விழுப்புரம் காவலர் விசாரித்துவிட்டு, கார் மூலம் இன்று கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைத்தனர்.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள தச்சரைச் சேர்ந்த அந்தப் பெண், புதுவை மதகடிப்பட்டு தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிகிச்சை முடிந்து ஊருக்கு புறப்பட்டபோது, ஊரடங்கு தடை உத்தரவால் வாகன வசதியின்றி, மதகடிப்பட்டிலிருந்து விழுப்புரத்திற்கு 15 கிலோ மீட்டர் தொலைவு நடந்து வந்துள்ளார்.

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் எதிரே முகாமிட்டிருந்த காவல்துறையினர், அப்பெண்ணை விசாரித்து அங்கிருந்த கார் மூலம் கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைத்தனர். அந்த கார் ஓட்டுனரும் இலவசமாகக் கொண்டு சேர்ப்பதாக அழைத்துச்சென்றார். இச்சம்பவம் அனைவராலும் பாராட்டப்பட்டது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments