தமிழ்நாடு

பாமக போராட்டம் : வழக்குப்பதிவு செய்யக் கோரி முறையீடு

DIN


சென்னை: சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் நடத்திய போராட்டத்தில் பொதுமக்கள், பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய சம்பவம் குறித்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு புதன்கிழமை வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினர். 

அப்போது பத்திரிக்கையாளர் வாராகி தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஜானகிராமன்,  பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வன்னியர் சமூக மக்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி சென்னையில்  செவ்வாய்க்கிழமை (டிச.1) போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாமகவைச் சேர்ந்த பலர் வாகனங்களில் சென்னைக்கு வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார், திரும்பிச் செல்ல கூறினார். 

இதனால் ஆத்திரமடைந்த பாமகவினர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பேருந்து, ரயில் மீது கற்களை வீசி பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்படுத்தினர். எனவே போராட்டத்தை நடத்திய வன்னியர் சங்கத்தை தடை செய்ய வேண்டும். போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரியும் மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும், அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையிடப்பட்டது. 

இதனையடுத்து நீதிபதிகள், மனுவாக தாக்கல் செய்தால் இந்த வழக்கை எந்த அமர்வு விசாரிக்க வேண்டும் என்பதை பதிவுத்துறை முடிவெடுக்கும் என தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகிய ஆபத்து... சாக்‌ஷி மாலிக்!

‘பிரதமர் நிலை மோசமாக உள்ளது’ : ஸ்லோவாகியா பாதுகாப்பு அமைச்சர்

இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது!: 5 படகுகள் பறிமுதல்

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை!

மழையால் டாஸ் சுண்டுவதில் தாமதம்; போட்டி நடைபெறுமா?

SCROLL FOR NEXT