முகப்பு
கோப்புப்படம்
தமிழ்நாடு

ஆலங்குடி அருகே கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் தாய் உள்பட 7 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அவரது தாய் உள்ளிட்ட 7 பேரை செவ்வாய்க்கிழமை காவல்துறை கைது செய்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:48 PM
கோப்புப்படம்
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அவரது தாய் உள்ளிட்ட 7 பேரை செவ்வாய்க்கிழமை காவல்துறை கைது செய்துள்ளனர்.

ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளம், இடையன்வயலைச் சேர்ந்த நாகேஷ்வரன் மகள் சாவித்திரி (19) கல்லூரி மாணவியான இவரும், தோப்புக்கொல்லையைச் சேர்ந்த தொழிலாளியான ராஜேந்திரன் மகன் விவேக் (20) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும், வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த வாரம்  வீட்டைவிட்டு வெளியேறிய இருவரும் கோவைக்கு சென்றுள்ளனர். 

அப்போது, கரூர் மாவட்டம், குளித்தலையில் கரோனா தடுப்பு பணிக்காக வாகன சோதனையில் ஈடுபட்ட காவல்துறை காரை  நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். அப்போது விவேக்கிற்கு, திருமண வயது நிறைவடையாதது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, காவல்துறை இருவரின் பெற்றோரையும் அழைத்து, இருவரையும் அனுப்பி வைத்துள்ளனர். 

இதனால், மனமுடைந்த நிலையில் இருந்த சாவித்திரி ஜூன் 11-ம் தேதி  இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தொடர்ந்து, வருவாய்த்துறையினருக்குத் தகவல் தெரிவிக்காமல் சாவித்திரியின் உடலை அவரது உறவினர்கள் எரித்துவிட்டனராம்.

இதுகுறித்து திருவரங்குளம் கிராம நிர்வாக அலுவலர் இளையராஜா அளித்த புகாரைத் தொடர்ந்து, ஆலங்குடி காவல்துறை, தற்கொலையை மறைத்தல், தடையங்களை அழித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சாவித்திரியின் தாய் சாந்தி (47), உறவினர்களான விஜயா (36), சிதம்பரம் (59), நடேசன் (59), கருப்பையா (70), ரெங்கசாமி (47), திருமலைராயசமுத்திரத்தைச் சேர்ந்த முருகன் (46) ஆகியோரை கைது செய்தனர். 
 
முழு கட்டுரையைப் படிக்க →