கூடலூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: 28 பேர் மீது வழக்கு
தேனி மாவட்டம் கூடலூரில் ஊரடங்கு உத்தரவை மீறி அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்த விவசாயிகள் சங்கத்தினர் 28 பேர் மீது தெற்கு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
தேனி மாவட்டம் கூடலூரில் ஊரடங்கு உத்தரவை மீறி அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்த விவசாயிகள் சங்கத்தினர் 28 பேர் மீது தெற்கு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
தேனி மாவட்டம் கூடலூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வியாழக்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஜெயன் தலைமை தாங்கினார். மணிகண்டன் முன்னிலை வகித்தார். கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், தேனி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் எஸ்டேட்டுகளுக்கு, விவசாயிகள் செல்ல அனுமதிக்க வேண்டும்.
இதுதொடர்பாக இரு மாவட்ட ஆட்சியர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். சுமார் 20 ஆயிரம் விவசாயிகள், தொழிலாளர்கள் சார்ந்த மக்கள் பிரச்னையை போர்க்கால அடிப்படையில் பேசி தீர்வு காண வேண்டும். தேனி மாவட்டத்திலிருந்து இடுக்கி மாவட்டத்திற்குச் செல்ல அனுமதி பெற்றுத்தர வேண்டும் என்று பேசினார்.
முன்னதாக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனாலும் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்த விவசாயிகள் சங்கத்தினர் 28 பேர்கள் மீது வியாழக்கிழமை கூடலூர் தெற்கு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.