தமிழ்நாடு

தமிழக விவசாயிகளுக்காகத்தான் ஆக. 5ல் உண்ணாவிரதப் போராட்டம்: அண்ணாமலை

DIN

தமிழக விவசாயிகளுக்காகவும் பொதுமக்களுக்காகவும் தான் வருகிற ஆகஸ்ட் 5 ஆம் தேதி மேகதாது அணைக்கு எதிராக உண்ணாவிரதம் நடத்தப்படவிருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். 

இந்திய சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 216வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து அவர் பிறந்த இடமான ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஓடாநிலையில் உள்ள திருவுருவ சிலைக்கு தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, 1967க்குப் பின் வந்த தமிழக அரசு பாடப்புத்தகத்தில் சுதந்திர போராட்ட வீரர் குறித்த வரலாறு இல்லை. நிறைய வரலாறு புறக்கணிப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

கீழடி ஆய்வை வரவேற்பதாக தெரிவித்த அண்ணாமலை, கீழடி ஒருவருக்கும் சொந்தமில்லை என்றார்.

நீட் தேர்வை பொருத்தவரை சமூகநீதியை தாண்டி வெற்றி பெற்றுள்ளது என்றும் , நீட் யாருக்கும் எதிரானது அல்ல என்றும், மா.சுப்பிரமணியம் நீட் தேர்வு எழுதி முதலில் பாஸ் செய்யட்டும் என்றார்.

பாஜக உண்ணாவிரதம் கர்நாடகத்திலுள்ள அனைத்து எதிர்கட்சிகளுக்கும் ஆளுங்கட்சிக்கும் எதிரானது. தமிழக விவசாயிகளுக்காக பொதுமக்களுக்காகத்தான் உண்ணாவிரதம் என்று கூறிய அவர், தமிழக மக்களையும் , தமிழர் உணர்வையும் பிரதமர் மோடி மதித்து வருவதாகவும் தமிழக பாஜக ஒவ்வொரு வீடு வீடாக சென்று மோடி செய்த திட்டங்கள் குறித்து விளக்கும் என்றார். தேர்தல் அறிக்கையில் சொன்னதை முதலில் திமுக செய்யட்டும் என்றும் குறிப்பிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT