ரூ.100 கோடி விலை நிலைநிறுத்தம் நிதி ஒதுக்கீடு
தமிழக அரசு மக்கள் நலனைக் காக்கும் விதமாக ரூ.100 கோடியிலான விலை நிலைநிறுத்தும் நிதியை ஏற்படுத்தி உள்ளதாக அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக அரசு மக்கள் நலனைக் காக்கும் விதமாக ரூ.100 கோடியிலான விலை நிலைநிறுத்தும் நிதியை ஏற்படுத்தி உள்ளதாக அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், அமைச்சர் ஐ. பெரியசாமி வெளியிட்ட அறிவிப்பில், தமிழக அரசு மக்கள் நலனைக் காக்கும் விதமாக கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் சந்தை குறுக்கீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள ரூ.100 கோடியிலான விலை நிலைநிறுத்தும் நிதியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: இதைச் செய்யாமல் விட்டால் குழந்தையின் ஆதார் செல்லாததாகிவிடும்
அத்தியாவசியப் பொருள்களாக அரிசி, பருப்பு, புளி, எண்ணெய் உள்ளிட்டவற்றின் விலை அதிகளவில் உயரும்போது அவற்றை கொள்முதல் செய்து, கூட்டுறவு மூலம் விற்பனை செய்து, நுகர்வோருக்கு குறைந்த விலையில் பொருள்கள் கிடைக்கப் பெறவும், வெளிச்சந்தையில் விலையைக் கட்டுப்படுத்தவும் விலை நிலைநிறுத்தம் நிதி பயன்படுத்தப்படுகிறது என்று அறிவித்தார்.
மேலும், தற்போது ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சி திட்டமானது நாமக்கல், திருவள்ளூர், கன்னியாகுமரி மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் ரூ.293.57 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
32 மாவட்டங்களில் இத்திட்டம் முதற்கட்டமாக செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது விருதுநகர், ராமநாதபுரம், திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் இரண்டாம் கட்டமாக செயல்படுத்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.