FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அதிமுகவை மீட்டெடுப்போம்; தினகரனை முதல்வராக்குவோம்: அமமுக தீர்மானம்

அதிமுகவை மீட்டெடுப்போம், டிடிவி தினகரனை முதல்வர் அரியணையில் அமர வைப்போம் என்பது உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் அமமுக செயற்குழு, பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்டன.

28 ஜனவரி 2024, 1:06 am IST
அதிமுகவை மீட்டெடுப்போம்; தினகரனை முதல்வராக்குவோம்: அமமுக தீர்மானம்
பகிர்:


சென்னை: அதிமுகவை மீட்டெடுப்போம், டிடிவி தினகரனை முதல்வர் அரியணையில் அமர வைப்போம் என்பது உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் அமமுக செயற்குழு, பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்டன.

10 இடங்களில் கணொலியில் நடந்த அமமுகவின் செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பலரும் கலந்து  கொண்டனர்.

அமமுக செயற்குழு மற்றும் பொதுக் குழுவில், கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை முதல்வர் அரியணையில் அமர வைக்க அயராது பாடுபடுவோம்,  அதிமுகவை மீட்டெடுக்கவும் அயராது உழைக்க வேண்டும் என செயற்குழு, பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

Advertisement

மேலும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இதரக் கட்சிகளுடனான கூட்டணியை முடிவு செய்ய பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு அதிகாரம் அளித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments