பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி பரோலில் உள்ள பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்க்கப்பட்டுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி பரோலில் உள்ள பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்க்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்த பேரறிவாளன், ஒரு மாத பரோலில் சிறையில் இருந்து வந்தாா்.
ஜூன் 28-ம் தேதியுடன் பரோல் முடிந்த நிலையில், மேலும் ஒரு மாதத்திற்கு பரோல் நீட்டிக்கப்படுவதாக தமிழக கூடுதல் தலைமை செயலாளா் எஸ்.கே.பிரபாகரன் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
இந்நிலையில், தற்போது இரண்டாவது முறையாக பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதத்திற்கு பரோல் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பரோலில் வந்த பேரறிவாளன் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் உள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.