மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

வேளாண் சட்டம் ரத்து: முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்ததைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அதை வரவேற்று தன் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

DIN

வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்ததைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அதை வரவேற்று தன் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக  கடந்த 11 மாதங்களுக்கு மேலாக தில்லி எல்லையில் ஹரியாணா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இன்று பிரதமர் மோடி, மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாகவும் அதை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் முறையாக திரும்பப் பெறப்படும் எனத் அறிவித்தார்.

இந்த அறிவிப்பை தற்போது அனைத்து தரப்பினரும் வரவேற்று வருகிற நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் , ‘மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக மாண்புமிகு பிரதமர் அவர்கள் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். இது முழுக்க முழுக்க உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.மக்களாட்சியில் மக்களின் எண்ணங்கள்தான் மதிக்கப்பட வேண்டும்; இதுவே வரலாறு சொல்லும் பாடம்! உழவர் பக்கம் நின்று போராடியதும் - வேளாண் விரோதச் சட்டங்களுக்கு எதிராக கழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதும் நாம் பெருமைகொள்ளத்தக்கதாகும்! அறவழிப் போராட்டத்தின் வழியே உரிமைகளை வென்றெடுத்து இந்தியா காந்தியின் மண் என்று உழவர்கள் உலகிற்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்’ என முகநூல் பக்கத்தில் தன் கருத்தைத் தெரிவித்திருக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ் கலாசாரத்தின் மீதான தாக்குதல்! ஜன நாயகனுக்காக ராகுல்!

சென்னை சங்கமம் - 2026 : முதல்வர் ஸ்டாலின் நாளை தொடக்கி வைக்கிறார்!

பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் வழங்கப்படும்!

என் அடுத்த பட இயக்குநர் இவர்தான்: அருண் விஜய்

பிரதமர் மோடி வருகை சென்னைக்கு மாற்றம்!

SCROLL FOR NEXT