FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டம் 

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி பட்டாசு தொழிலாளர்கள் புதன்கிழமை சிவகாசி சாத்தூர் சாலையிலுள்ள மீனம்பட்டியில் போராட்டம் நடத்தினர்.

Updated On : 24 நவம்பர் 2021, 1:07 pm IST
பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி சிவகாசி சாத்தூர் சாலையிலுள்ள மீனம்பட்டியில் போராட்டம் நடத்தி பட்டாசு தொழிலாளர்கள்.
பகிர்:


விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி பட்டாசு தொழிலாளர்கள் புதன்கிழமை சிவகாசி சாத்தூர் சாலையிலுள்ள மீனம்பட்டியில் போராட்டம் நடத்தினர்.

தீபாவளி பண்டிகை நவம்பர் 4 ஆம் தேதி முடிவடைந்தது. வழக்கமாக தீபாவளி பண்டிகை முடிந்து சுமார் ஒரு வாரத்தில் பட்டாசு ஆலைகள் திறக்கப்பட்டு அடுத்து வரும் ஆண்டுக்கான பட்டாசு தயாரிப்பு பணி நடைபெறும்.

இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முடிந்து சுமார் 20 நாள்கள் ஆகியும் பட்டாசு ஆலைகள் திறக்கப்படவில்லை. பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் பட்டாசு தொழிலாளர்களுக்கு வருமானம் இன்றி தவித்து வருகிறார்கள். எனவே, அவர்கள் உடனடியாக பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும். சரவெடி தயாரிக்க அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரி மீனம் பட்டியில் உள்ள பட்டாசு தொழிலாளர்கள் சுமார் 100 பெண்கள் உள்பட 120 பேர் அங்கு உள்ள பேருந்து நிறுத்தம் அருகே நின்று போராட்டம் நடத்தினர்.

பின்னர், சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த போராட்டக்காரர்கள் முடிவு செய்தனர்.

இந்நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை ஆய்வாளர் சிவகுமார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். உங்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதி மாவட்ட ஆட்சியரிடம் கொடுங்கள் என ஆய்வாளர்கள் கூறியதை ஏற்று போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments