முகப்பு
தமிழ்நாடு

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இரு மாணவர்கள் சடலமாக மீட்பு!

கடலூர் அருகே மலட்டாற்றில் சனிக்கிழமை குளித்த மாணவர்கள் இருவர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டனர்.

Updated On : 28 நவம்பர், 2021 at 10:35 AM
சடலமாக மீட்கப்பட்ட பாலாஜி -  அவினேஷ்
பகிர்:

கடலூர்: கடலூர் அருகே மலட்டாற்றில் சனிக்கிழமை குளித்த மாணவர்கள் இருவர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டனர்.

கடலூர் வட்டம், ராசாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகன் பாலாஜி (20). கடலூரில் உள்ள கல்லூரியில் கணினி அறிவியல் பிரிவில் பி.எஸ்சி.,படித்து வருகிறார். அதே கிராமத்தைச் சேர்ந்த முத்துவேல் மகன் அவினேஷ் (17). பிளஸ் 2 படித்து வருகிறார். இவர்கள் இருவரும் நண்பர்கள்.

தொடர் மழை காரணமாக, கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், நண்பர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள மலட்டாற்றுக்கு குளிக்கச் சென்றறனர். ஆற்றில் அதிகளவில் தண்ணீர் செல்லும் நிலையில் இருவரும் நீரில் மூழ்கி மாயமாகினர்.

இதுகுறித்த தகவலின்பேரில் கடலூர் தீயணைப்புத் துறைறயினர் விரைந்து வந்து ஆற்றில் இறங்கி தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இரவு வரை மாணவர்கள் கிடைக்காததால் தேடுதல் பணியை ஒத்திவைத்தனர்.

தொடர்ந்து, இரண்டாம் நாளாக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தேடுதல் பணி தொடங்கியது. இதில் இருவம் சடலமாக மீட்கப்பட்டனர். 

பின்னர், இருவரது சடலமும் உடற்கூராய்விற்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

துகுறித்து தூக்கணாம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.