முகப்பு

மருத்துவ சேவைகளை ஆக்கப்பூா்வமாக அளிப்பதில் தமிழகம் முதலிடம்

மருத்துவ சேவைகள் உரிய பயனாளிகளை சென்றடையும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

28 ஜனவரி 2024, 9:58 am
மருத்துவ சேவைகளை ஆக்கப்பூா்வமாக அளிப்பதில் தமிழகம் முதலிடம்
பகிர்:

மருத்துவ சேவைகள் உரிய பயனாளிகளை சென்றடையும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சுகாதார சேவைகள் பயனாளிகளை சென்றடைவதில் மாநிலங்கள் அளவிலான ஒப்பீட்டு அறிக்கையை ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

Advertisement

Advertisement

அதில், சமூக மற்றும் பொருளாதார வாய்ப்புகளில் உள்ள சமத்துவமின்மையானது 5 முக்கிய அம்சங்கள் மூலம் வரையறுக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள், சுகாதாரம், கல்வி, சமூக - பொருளாதார பாதுகாப்பு மற்றும் சமூக நீதி ஆகியவற்றின் அடிப்படையில் அவை கணக்கிடப்பட்டுள்ளன.

சுகாதார சேவைகளைப் பொருத்தவரை, மருத்துவக் காப்பீடு, மகப்பேறு சேவைகள், பிரசவம், குழந்தைகளுக்கான தடுப்பூசி மற்றும் அரசு மருத்துவமனைகளின் படுக்கை வசதி போன்ற விவரங்கள் தேசிய அளவில் ஒப்பீடு செய்யப்பட்டன.

அதில் நாட்டில் உள்ள மாநிலங்களிலேயே தமிழகம்தான் முதலிடம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரமான மருத்துவ சேவைகள் அனைத்து பயனாளிகளையும் சென்றடைவது என்பது மக்களுக்கு சம உரிமை கிடைப்பதை உறுதி செய்வதன் முக்கிய அடையாளங்களுள் ஒன்றாகும். வாய்ப்புகளை அடைவதன் ஒரு முக்கிய அடையாளமாகும். தமிழகம் அதில் முதலிடம் வகிப்பதன் மூலம் மாநில மக்களுக்கான வளா்ச்சி மேம்படும். தரமான வாழ்க்கை முறை, முதியோா் நலம், நோயாளிகளுக்கான பாதுகாப்பான மருத்துவ சேவைகள் ஆகியவற்றை இதன் வாயிலாக உறுதிப்படுத்தப்பட முடியும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.