முகப்பு
தமிழ்நாடு

கேரள மாநில காங்கிரஸ் தலைவர் வேலூரில் காலமானார்

கேரளம் மாநில காங்கிரஸ் தலைவரும், அம்மாநில சட்டப்பேரவை உறுப்பினருமான பி.டி.தாமஸ்(71) புற்றுநோய் காரணமாக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் புதன்கிழமை காலை  உயிரிழந்தார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பி.டி.தாமஸ்
பகிர்:

வேலூர்: கேரளம் மாநில காங்கிரஸ் தலைவரும், அம்மாநில சட்டப்பேரவை உறுப்பினருமான பி.டி.தாமஸ்(71) புற்றுநோய் காரணமாக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் புதன்கிழமை காலை  உயிரிழந்தார்.

இவர் கணைய புற்றுநோய் காரணமாக, கடந்த சில மாதங்களாகவே வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் புதன்கிழமை காலை 10.20 மணிக்கு உயிரிழந்தார். உடலை எம்ஃபாமிங் செய்யும் பணி நடந்து வருகிறது. தொடர்ந்து அவரது உடலை கேரளா அனுப்புவதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.