தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவியை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவியை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் மாநிலத்தின் முழுநேர ஆளுநராக நியமனம் செய்யப்பட்டதை அடுத்து, நாகாலாந்து ஆளுநராகப் பொறுப்பு வகித்து வரும் ஆர்.என்.ரவி, தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
படிக்க | தமிழகத்தின் புதிய ஆளுநருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
Advertisement
Advertisement
உத்தரகண்ட் ஆளுநராக இருந்த பேபி ராணி மயூராவின் ராஜிநாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார்.
’இதனையடுத்து உத்தரகண்ட் ஆளுநராக லெப்டினெண்ட் ஜெனரல் குர்மித் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆர்.என்.ரவி. வகித்து வந்த நாகாலாந்து ஆளுநர் பொறுப்பினை அஸ்ஸாம் மாநில ஆளுநர் ஜெக்தீஷ் முகி கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.