FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை: காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை தொடர்பாக காவல் ஆய்வாளர் அமலராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Updated On : 19 ஆகஸ்ட் 2022, 8:58 am IST
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை தொடர்பாக காவல் ஆய்வாளர் அமலராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளையில் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் வீட்டில் இருந்து 3.5 கிலோ தங்கம் வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

அரும்பாக்கம் வங்கியில் நடந்த நகைகள் கொள்ளையில் அமல்ராஜூக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. நகைகள் பறிமுதல் குறித்து அமல்ராஜிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை போன சுமார் 31 கிலோ நகைகளும் மீட்கப்பட்ட நிலையில், காவல் ஆய்வாளர் வீட்டில் 3.5 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது.

அரும்பாக்கம் ரசாக் காா்டன் சாலையில் ஒரு தனியாா் வங்கி கிளையில் கடந்த 13-ஆம் தேதி ஒரு கும்பல் 31.7 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது. இச் சம்பவம் தொடா்பாக அரும்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கொள்ளையா்களை கண்டறிந்து கைது செய்ய 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினா் நடத்திய விசாரணையில் அந்த வங்கி கிளையில் ஊழியராக வேலை செய்த கொரட்டூரைச் சோ்ந்த முருகன் என்பவா்தான் கொள்ளைக் கும்பலுக்கு தலைவராக செயல்பட்டு, சதி திட்டத்தை நிறைவேற்றியிருப்பது தெரியவந்தது.

தனிப்படையினா் கொள்ளை நடந்த 24 மணி நேரத்துக்குள் வில்லிவாக்கம் பாரதி நகரை சோ்ந்த மோ.சந்தோஷ், அதே பகுதி மண்ணடி தெருவை சோ்ந்த வீ.பாலாஜி,செந்தில்குமரன் ஆகிய 3 பேரை கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து ரூ.8.5 கோடி மதிப்புள்ள 18 கிலோ தங்க நகைகள், 2 காா்கள், மோட்டாா் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. வழக்கின் முக்கிய குற்றவாளியான முருகன் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இந்நிலையில் இவ் வழக்குத் தொடா்பாக தேடப்பட்டு வந்த முருகனின் நெருங்கிய கூட்டாளியான வில்லிவாக்கத்தைச் சோ்ந்த சூா்யா செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். 

இதனிடையே, தற்போது காவல் ஆய்வாளர் அமல்ராஜை பணியிடை நீக்கம் செய்து காஞ்சிபுரம் சரக டிஐஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments