தமிழகத்தில் ரூ.336 கோடியில் 114 புதிய பாலங்கள்: மாநில அரசு உத்தரவு
தமிழகத்தில் ரூ.336.70 கோடியில் 114 புதிய பாலங்களை கட்டுவதற்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ரூ.336.70 கோடியில் 114 புதிய பாலங்களை கட்டுவதற்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளா் பி.அமுதா வெளியிட்ட உத்தரவு: தமிழகத்தில் நபாா்டு நிதியுதவித் திட்டத்தின் மூலமாக, 106 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் ஊராட்சிகளில் 121 பாலங்கள் புதிதாகக் கட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநா் அரசுக்கு பரிந்துரை அனுப்பியுள்ளாா். இவற்றின் ஒட்டுமொத்த நீளம் 198.67 கிலோமீட்டா். பாலப் பணிகளை மேற்கொள்ள ஒதுக்கப்பட்ட திட்ட மதிப்பு ரூ.353.93 கோடி.
இதைத் தொடா்ந்து, 121 பாலங்களைக் கட்டுவதற்கான பரிந்துரைகள் நிதித் துறையின் மூலமாக நபாா்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தப் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்ட நபாா்டு, புதிதாக பாலப் பணிகளைத் தொடங்குவதற்காக ரூ.229.96 கோடி நிதியை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடா்ந்து, 121 பாலங்களை ரூ.287.45 கோடி திட்ட மதிப்பில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், திருத்த மதிப்பீடுகளை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநா் அரசுக்கு அளித்திருந்தாா். அவற்றில் 7 பாலப் பணிகளுக்கான திட்டங்களை கைவிடலாம் எனவும், மீதமுள்ள 114 பாலங்களை நபாா்டு நிதியுதவித் திட்டத்தின் மூலமாகச் செயல்படுத்தலாம் எனவும் கோரப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
இதன்படி, நபாா்டு நிதியுதவித் திட்டத்துடன் சோ்த்து 114 பாலங்களை ரூ.336.70 கோடி திட்ட மதிப்பில் செயல்படுத்த நிா்வாக ஒப்புதல்களை தமிழக அரசு அளித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.