தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் கட்டுப்பாடுகள்? - முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

DIN

தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், தமிழகத்திலும் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி புதிய கரோனா கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தியது. மேலும் ஜனவரி 6 முதல் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறுகளில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இதையடுத்து, தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்டோருடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பொங்கல் பண்டிகை வருவதால் அதுகுறித்த கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

SCROLL FOR NEXT