முகப்பு
தமிழ்நாடு

தமிழகம், புதுவையில் அடுத்த 4 நாள்களுக்கு வறண்ட வானிலை

தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அடுத்த 4 நாள்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. 

Updated On : 23 ஜனவரி, 2022 at 4:11 PM
பகிர்:


தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அடுத்த 4 நாள்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம், புதுச்சேரியில் ஜனவரி 23-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும். 

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸையொட்டியும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.