முகப்பு
தமிழ்நாடு

ஓபிஎஸ் மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு லேசான காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Updated On : 16 ஜூலை 2022, 11:08 am IST
ஓ.பன்னீா்செல்வம்
பகிர்:


முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் லேசான காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழக எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. 

இதையடுத்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் தொற்று பாதிப்பில் இருந்து விரைவில் பூரண குணமடைய வேண்டுவதாக தெரிவித்திருந்தனர்.

Advertisement

Advertisement

இந்நிலையில், அவருக்கு தொற்று பாதிப்பில்லை எனவும், லேசான காய்ச்சல் காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாள்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற பின்னர் ஓ.பன்னீர்செல்வம் வீடு திரும்புவார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.