கோப்புப்படம் 
தமிழ்நாடு

அதிமுகவின் 7 வங்கிக் கணக்குகளை முடக்க ஆர்பிஐ-க்கு ஓபிஎஸ் கடிதம்

அதிமுகவின் 7 வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் என ரிசர்வ் வங்கிக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

DIN

சென்னை: அதிமுகவின் 7 வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் என ரிசர்வ் வங்கிக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

அதிமுகவின் 7 வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குநருக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் படி அதிமுக ஒருங்கிணைப்பாளராக தற்போது வரை உள்ளதாக ஓபிஎஸ் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுகவின் பெயரில் உள்ள 3 கணக்குகள், அதிமுக தலைமைக் கழக கட்டட நிதி கணக்கு ஆகியவற்றை முடக்க கோரிக்கைவும், 7 வங்கிக் கணக்குகள், 2 வைப்பு நிதி கணக்குகளை முடக்க ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநருக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும் வரை தாம்தான் அதிமுக பொருளாளர் என குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிதிகளை மீறி திண்டுக்கல் சீனிவாசனை பொருளாளராக இபிஎஸ் நியமித்துள்ளார். தேர்தல் ஆணையம் இறுதி முடிவை அறிவிக்கும் வரை ரிசர்வ் வங்கிகளுக்கு உரிய வழிகாட்டுதல் தரவேண்டும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசத்தில் டெங்கு பரவல்! 24 மணிநேரத்தில் புதியதாக 1,147 பாதிப்புகள் உறுதி!

இரண்டு நாள் சுற்றுப்பயணம்! வேலூரில் துணை முதல்வர் நடைபயிற்சி!

பிளஸ் 2 கணக்குப்பதிவியல் தேர்வு: முதல்முறையாக கால்குலேட்டர் அனுமதி!

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! முதல்வர் ஸ்டாலின்

கமல் பிறந்த நாளில் மறுவெளியீடாகும் 2 திரைப்படங்கள்!

SCROLL FOR NEXT