ஜூன் 20 முதல் பொறியியல் சேர்க்கை விண்ணப்பம்: அமைச்சர் பொன்முடி
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் ஆன்லைன் மூலம் ஜூன் 20ஆம் தேதி முதல் வழங்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் ஆன்லைன் மூலம் ஜூன் 20ஆம் தேதி முதல் வழங்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது, ஜூன் 20ஆம் தேதி முதல் ஜூலை 19ஆம் தேதி வரை பொறியியல் படிப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
படிக்க | ஜூன் 28 முதல் பி.இ., பி.டெக்., செமஸ்டர் தேர்வு
Advertisement
Advertisement
ஜூலை 20 முதல் 31ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெறும்.
பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 16ஆம் தேதி தொடங்கும்.
இதேபோன்று அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் ஜூன் 27ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.