காவல்துறை புகார் ஆணையம்: தமிழக அரசுக்கு இறுதி அவகாசம் அளித்தது சென்னை உயர் நீதிமன்றம்
காவல்துறை புகார் ஆணையம் அமைப்பது தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இறுதி அவகாசம் வழங்கியுள்ளது.
சென்னை: காவல்துறை புகார் ஆணையம் அமைப்பது தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இறுதி அவகாசம் வழங்கியுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சுதந்திரமான நபர்களை ஏன் நியமிக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. உயர் அதிகாரிகளுக்கு எதிரான புகாரை அவர்களே எப்படி விசாரிக்க முடியும் என்று தலைமை நீதிபதி அமர்வு கூறியுள்ளது.
உள்துறை செயலாளர் தலைமையில் காவல்துறை புகார் ஆனையம் அமைக்கப்பட்டதை எதிர்த்து மக்கள் நீதி மையத்தின் ஏ.ஜி.மவுரியா வழக்கு தொடர்ந்ததையடுத்து, காவல்துறை புகார் ஆணையம் அமைக்கும் சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து விளக்கம் தர இறுதி அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.