தமிழ்நாடு

அடுத்த பொதுக்குழுவில் 'ஒற்றைத் தலைமை' தீர்மானம்: இபிஎஸ் தரப்பு திட்டவட்டம்

அடுத்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் 'ஒற்றைத் தலைமை' தீர்மானம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். 

DIN

அடுத்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் 'ஒற்றைத் தலைமை' தீர்மானம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். 

அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. ஓபிஎஸ் ஒப்புதல் அளித்துள்ள தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படுவதாக பொதுக்குழு அறிவித்துள்ளது. 

மேலும் பொதுக்குழு உறுப்பினர்கள் பெரும்பாலானோர் ஒற்றைத் தலைமை என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். அடுத்த பொதுக்குழு கூட்டம் வருகிற ஜூலை 11 ஆம் தேதி நடைபெற உள்ளது. 

இந்நிலையில், ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் 'ஒற்றைத் தலைமை' தீர்மானம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், 'பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமை தீர்மானம் கொண்டுவர கோரிக்கை வைத்துள்ளனர். அடுத்த பொதுக்குழுவை சுமூகமாக நடத்துவோம்' என்று கூறியுள்ளார். 

அதுபோல, முன்னாள் அமைச்சர்களும் இபிஎஸ் ஆதரவாளர்களுமான எம்.ஆர். விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கண்டிப்பாக அடுத்த பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கூறினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் நெரிசல் பலி சம்பவம்: மற்றொரு தவெக நிர்வாகி கைது!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!

பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்: புரட்சி தான் ஒரே வழி! - ஆதவ் அர்ஜுனா நீக்கிய பதிவு!

சரஸ்வதி பூஜை: பூக்கள் விலை கணிசமாக உயா்வு

இன்றைய நிகழ்ச்சி

SCROLL FOR NEXT