FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தங்கம் சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.39,280-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சற்று குறைந்தது. பவுனுக்கு ரூ.880 குறைந்து, ரூ.39,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

1 பிப்ரவரி 2024, 2:07 pm IST
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சற்று குறைந்தது. பவுனுக்கு ரூ.880 குறைந்து, ரூ.39,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரஷியா-உக்ரைன் இடையேயான போா் காரணமாக தங்கம் விலை பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது. குறிப்பாக, கடந்த 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரத்தையும், கடந்த 24-ஆம் தேதி ரூ.39 ஆயிரத்தையும், மாா்ச் 7-ஆம் தேதி ரூ.40 ஆயிரத்தையும் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை கடந்த செவ்வாய்க்கிழமை சற்று குறைந்தது. இதன் தொடா்ச்சியாக, சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.288 குறைந்து, ரூ.40,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.36 குறைந்து, ரூ.5,020-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.880 குறைந்து, ரூ.39,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.110 குறைந்து, ரூ.4,910-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு ரூ.1.80 குறைந்து, ரூ.69.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,800 குறைந்து, ரூ.79,400 ஆகவும் இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments