முகப்பு
தமிழ்நாடு

கோவை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிளக்கு பூஜை

கோவையில் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலின் திருக்கல்யாண வைபவம் விழாவை முன்னிட்டு ஏராளமான பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்டு நேர்த்திக் கடனை செலுத்தினர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
கோவையில் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்ட ஏராளமான பெண்கள். 
பகிர்:

கோவையில் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலின் திருக்கல்யாண வைபவம் விழாவை முன்னிட்டு ஏராளமான பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்டு நேர்த்திக் கடனை செலுத்தினர். 

கோவை ராம் நகர் பகுதியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. 63 ஆண்டுகள் பிரசித்தி பெற்ற இக்கோயிலின் 40 ஆம் ஆண்டு சித்திரை உற்சவ திருக்கல்யாண வைபவ விழா கோவிலின் செயல் அறங்காவலர் சண்முகசுந்தரம் தலைமையில் வசந்த குமார சிவாச்சாரியார் மந்திரம் முழங்க ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.

ஸ்ரீ முத்துமாரியம்மன்

நிகழ்ச்சியின் ஒருபகுதியாக திருவிளக்கு பூஜை இன்று நடைபெற்றது. இறைவனை ஒளிவடிவாக உருவகித்து நலன்களை வேண்டி நடத்தப்படும் திருவிளக்கு வழிபாட்டில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு நேர்த்திக் கடனை செலுத்தினர்.

மேலும், வருகிற செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு மகா திருக்கல்யாணம், அம்மன் அழைத்தல், சிம்மவாகனம் புறப்பாடு, மாவிளக்கு பூஜை, மஞ்சள் நீராடல், அபிஷேக பூஜை உள்ளிட்டவை நடைபெற உள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →