முகப்பு
தமிழ்நாடு

மாநிலங்களவைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு? பாமக அறிவிப்பு

மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவளிப்பதாக பாமக அறிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:18 AM
ராமதாஸ்
பகிர்:

ரமாநிலங்களவை தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவளிப்பதாக பாமக அறிவித்துள்ளது.

மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் மாதம் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவளிப்பதாக பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக அக்கட்சி தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் 

தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த மாதம் நடைபெற உள்ள தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவைக் கோரி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் எழுதிய கடிதத்தை மருத்துவர் அய்யா அவர்களிடம் ஒப்படைத்தனர். மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அதிமுக குழுவினரும் கேட்டுக் கொண்டனர்.

அதிமுகவின் கோரிக்கை குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் மருத்துவர் அய்யா அவர்கள், நடத்திய கலந்தாய்வில், அதிமுக வேட்பாளர்களை ஆதரிப்பது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. அதன்படி வரும் மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவளிக்கும் என்பதை மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →