திருநாவுக்கரசர் 
தமிழ்நாடு

கருத்து வேறுபாடு இருந்தாலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவாகத் தொடர்கிறது: திருநாவுக்கரசர்

பேரறிவாளன் விடுதலையில் கருத்து வேறுபாடு இருந்தாலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடரும் என காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

DIN

பேரறிவாளன் விடுதலையில் கருத்து வேறுபாடு இருந்தாலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடரும் என காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறைத்தண்டனை பெற்று வந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. திமுக உள்ளிட்ட கட்சிகள் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. 

இந்நிலையில், இன்று சென்னை எழும்பூரில் உள்ள சி.பா. ஆதித்தனார் சிலைக்கு மரியாதை செலுத்திய காங்கிரஸ் எம்,பி.யும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான  திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர், 'பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் திமுகவும் காங்கிரஸும் ஒன்றையொன்று விமர்சிப்பது புதிதல்ல. திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே கருத்து வேறுபாடு இருந்தாலும் கூட்டணி வலுவாகத் தொடர்கிறது. அவ்வளவு எளிதில் திமுக - காங்கிரஸ் கூட்டணியை பிரித்துவிட முடியாது. 

காங்கிரஸ் கட்சியின் தலைவர் கொல்லப்பட்டதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற கருத்தில் காங்கிரஸ் கட்சியினர் தெளிவாக உள்ளனர்' என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘பாலின் தரத்தை 12 சதவீதமாக குறைக்க வேண்டும்’

வெளி மாநிலத்தவா்களுக்கு தமிழகத்தில் வாக்காளா் அட்டை வழங்கக் கூடாது: பெ.மணியரசன்

வாகனம் மோதியதில் ஐயப்ப பக்தா் உயிரிழப்பு

பிசானத்தூா் மருத்துவக் கழிவு ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 29 போ் கைது

‘மத்திய நிதியை வீணடித்த ஹிமாசல் காங்கிரஸ் அரசு’: ஜெ.பி. நட்டா விமா்சனம்

SCROLL FOR NEXT