தமிழ்நாடு

பாலக்கோடு அருகே கிராமத்துக்குள் புகுந்த 4 யானைகள்

DIN


தருமபுரி: தருமபுரி மாவட்டம்  பாலக்கோடு அருகே ஈச்சம்பள்ளம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை 4 யானைகள் கிராமத்துக்குள் புகுந்தன.

பாலக்கோடு அருகே வனப்பகுதியில் இருந்து  20 வயது கொண்ட 3 யானைகள், ஒரு குட்டி யானை என  4 காட்டு யானைகள் உணவு தேடி ஈச்சம்பள்ளம் கிராமத்துக்குள் அதிகாலை புகுந்தன. இந்த யானைகள் அக்கிராமத்துக்குள் விளை நிலங்கள் இருந்த நெல், தக்காளி, கரும்பு உள்ளிட்ட பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது.

இதைக் கண்ட கிராம மக்கள் பாலக்கோடு வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் அங்கு விரைந்து வந்த வனத்துறையினர் ஒலி எழுப்பியும், பட்டாசு வெடித்தும் அப்பகுயில் முகாமிட்டிருந்த காட்டு யானைகளை அருகில் இருந்த மொரப்பூர் காப்புக் காட்டுக்கு விரட்டியடித்தனர். மேலும் தொடர்ந்து யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கிராமத்துக்குள் புகுந்த யானைகள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”டீக்கடைக்காரரால் என்ன செய்ய முடியும்? விமர்சித்த காங்கிரஸின் நிலை..” பிரதமர் மோடி பிரசாரம்

ரிஷபத்துக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான்

ஆடை சுதந்திரம் கோரியது குற்றமா? செளதியில் பெண்ணுரிமைப் போராளிக்குச் சிறை: அமைப்புகள் கண்டனம்!

"வாக்கு சதவிகித விவரங்களில் சந்தேகம்!”: திருமாவளவன் பேட்டி

ஆலங்குடி குருபரிகார கோயிலில் குருப்பெயர்ச்சி விழா: திரளான பக்தர்கள் தரிசனம்

SCROLL FOR NEXT