FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பண்ருட்டி அருகே இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து: 2 பேர் பலி

கடலூர்  மாவட்டம், பண்ருட்டி அருகே புதன்கிழமை இரவு கார்-பைக் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் பலியாகினர்.

Updated On : 20 அக்டோபர் 2022, 11:23 am IST
விபத்தில் இறந்த வினோத் குமார் - மோகன் குமார்
பகிர்:

நெய்வேலி: கடலூர்  மாவட்டம், பண்ருட்டி அருகே புதன்கிழமை இரவு கார்-பைக் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் பலியாகினர்.

பண்ருட்டி அடுத்துள்ள மேல்அருங்குணம் கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் (32), மோகன் குமார் (24), பலாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விஜி (24) ஆகிய மூவரும் இரு சக்கர வாகனத்தில் புதுப்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தனர். 
அப்போது, பண்ருட்டியில் இருந்து அரசூரை நோக்கி வேகமாக வந்து கார் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில்,  மேல்அருங்குணம் கிராமத்தைச் சேர்ந்த வினோத் குமார் (32), மோகன் குமார் (24) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த விஜய் (24) கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். 

விபத்து குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே ஊரைச் சேர்ந்த இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments