தமிழ்நாடு

கோவை கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி: கேட்பாரற்று நிற்கும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!

DIN

கோவை கார் வெடித்த சம்பவத்தின் எதிரொலியாக கேட்பாரற்று நிற்கும் இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். 

கோவையில் கடந்த 23 ஆம் தேதி டவுன்ஹால் பகுதியில் அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்த சம்பவம் பெறும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்தான விசாரணையில் தற்பொழுது வரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்தான விசாரணை தற்போது என்ஐஏ விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மெக்கானிக் ஷாப் கடைகளில் நீண்ட நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை கணக்கெடுக்கும் காவல்துறையினர்.

இந்நிலையில், கோவை மாநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். 

அதன்படி, கோவை மாநகரில் நீண்ட நாள்களாக கேட்பாரற்று நிற்கும் கார்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 

கேட்பாரற்று நிற்கும் கார்களின் உரிமையாளர்களை தொடர்பு கொண்டு கார்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. 

உரிமையாளர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் காவல்துறையினர் அந்த கார்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

கோவை மாநகரில் நீண்ட நாள்களாக கேட்பாரற்று நிற்கும் வாகனங்களை பறிமுதல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து காவலர்கள்.

இந்நிலையில், நீண்ட நாள்களாக கேட்பாரற்று நிற்கும் இருசக்கர வாகனங்களையும் போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.

சதி வேலைகளுக்காக காரை பயன்படுத்தியது போல இரு சக்கர வாகனங்களையும் பயன்படுத்தலாம் என்ற கோணத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதே சமயம் உக்கடம் பகுதியில் உள்ள மெக்கானிக் ஷாப் கடைகளிலும் நீண்ட நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள  வாகனங்களையும் காவல்துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT