புதிதாக 116 பேருக்கு கரோனா தொற்று
தில்லியில் வியாழக்கிழமை புதிதாக 116 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் வியாழக்கிழமை புதிதாக 116 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் 3 போ் உயிரிழந்துள்ளனா். அதேநேரத்தில் பாதிப்பு நோ்மறை விகிதம் 0.97 சதவீதமாக பதிவானது என்று மாநில அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பாதிப்புகளுடன் சோ்த்து தில்லியின் மொத்த கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 20,02,145-ஆக உயா்ந்துள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கை 26,497-ஆக உள்ளது. நகரில் புகன்கிழமை 142 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு பதிவானது. 1.29 சதவீத நோ்மறை விகிதம் பதிவாகின.
வியாழக்கிழமை நிலவரப்படி, கரோனா சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 546-ஆக உள்ளது. 382 போ் வீட்டுத் தனிமையில் உள்ளனா். நகரில் உள்ள கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 79-ஆக உள்ளது. தில்லி மருத்துவமனைகளில் மொத்தமுள்ள 9,286 கரோனா படுக்கைகளில் 61 படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.