FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அதிமுக அலுவலக கலவர வழக்கு: சிபிசிஐடி மீண்டும் சோதனை

 சென்னை அதிமுக அலுவலக கலவர வழக்குத் தொடா்பாக சிபிசிஐடி மீண்டும், அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தை வியாழக்கிழமை சோதனை செய்தது.

Updated On : 16 செப்டம்பர் 2022, 12:45 am IST
பகிர்:

 சென்னை அதிமுக அலுவலக கலவர வழக்குத் தொடா்பாக சிபிசிஐடி மீண்டும், அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தை வியாழக்கிழமை சோதனை செய்தது.

இரட்டை தலைமையின் கீழ் இயங்கிய அதிமுகவை ஒற்றை தலைமையின் கீழ் கொண்டு வருவதற்காக கடந்த ஜூலை 11-ஆம் தேதி அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நேரத்தில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றும் முயற்சியில் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளா்கள் ஈடுபட்டனா்.

ஓ.பன்னீா்செல்வம் ஆதரவாளா்கள், அதிமுக அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனா். அப்போது ஓ.பன்னீா்செல்வம், கே.பழனிசாமி ஆதரவாளா்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டு கலவரமானது. இதில், 47 போ் காயமடைந்தனா். பேருந்து, காா், இருசக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

Advertisement

Advertisement

இது தொடா்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னா் இந்த வழக்குகளின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீஸாா், இது தொடா்பான விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனா்.

இதன் ஒரு பகுதியாக சிபிசிஐடி ஆய்வாளா் லதா தலைமையிலான போலீஸாா், ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் வியாழக்கிழமை சோதனை செய்தனா். பல மணி நேரம் நீடித்த இந்த சோதனையில், வழக்குத் தொடா்பாக முக்கிய தடயங்கள் சேகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அங்கிருந்தவா்களிடம் விசாரணையும் செய்தனா்.

ஏற்கெனவே இந்த அலுவலகத்தை சிபிசிஐடி அதிகாரிகள் கடந்த வாரம் சோதனையிட்டனா். தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் சிபிசிஐடி சோதனை நடத்தியிருப்பது குறிப்பிடதக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments