தமிழக அரசே துணைவேந்தர்களை நியமிக்க புதிய சட்ட மசோதா: பேரவையில் இன்று தாக்கல்
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிப்பதற்கான புதிய சட்ட மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது.
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிப்பதற்கான புதிய சட்ட மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது.
புதிய சட்ட மசோதாவை, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்கிறார்.
தற்போது துணைவேந்தர்களை ஆளுநரே நியமனம் செய்து வரும் நிலையில், துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், துணைவேந்தர்களை தமிழக அரசே நியமனம் செய்வதற்கான புதிய மசோதாவை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.