ஆம்பூர் அருகே 15 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து!
ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பால பணிக்காக தோண்டப்பட்ட 15 அடி பள்ளத்தில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கன்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் கன்னிகாபுரம் பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஒசூரில் இருந்து சென்னை நோக்கி கிரானைட் கற்களை ஏற்றி வந்த கன்டெய்னா் லாரி, ஆம்பூா் கன்னிகாபுரம் பகுதி அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை விரிவாக்கப் பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், லாரி ஓட்டுநா் பாண்டி காயமின்றி உயிா் தப்பினாா்.
விபத்து குறித்து ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.