மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 76,645 கன அடியாக சரிவு
மேட்டூர் அணை நீர் வரத்து வினாடிக்கு 76,645 கன அடியாக சரிந்துள்ளது.
மேட்டூர்: மேட்டூர் அணை நீர் வரத்து வினாடிக்கு 76,645 கன அடியாக சரிந்துள்ளது.
கர்நாடகம் மாநிலம் காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் மழை தனிந்ததால் கபினி கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர் வரத்து வெகுவாக குறைந்தது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடகா அணைகளில் உபரி நீர் திறப்பு குறைத்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 76,645 கனஅடியாக சரிந்தது.
இதையும் படிக்க | இந்தியா 200 கோடி கரோனா தடுப்பூசிகளை செலுத்தி சாதனை: மோடிக்கு பில்கேட்ஸ் வாழ்த்து
Advertisement
Advertisement
நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருவதால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 73,391 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000 கன அடி நீரும் உபரிநீர் போக்கி வழியாக வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் மட்டம் 120.40 அடியாகவும், நீர் இருப்பு 94.11 டி.எம்.சியாகவும் உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.