பொறியியல் கல்லூரி மாணவரை கைது செய்த உளவுத் துறை! ஆம்பூரில் பரபரப்பு
ஆம்பூரில் வசித்து வரும் பொறியியல் கல்லூரி மாணவரை மத்திய உளவுப் பிரிவு போலீஸார் சனிக்கிழமை அதிகாலை கைது செய்தனர்.
ஆம்பூர்: ஆம்பூரில் வசித்து வரும் பொறியியல் கல்லூரி மாணவரை மத்திய உளவுப் பிரிவு போலீஸார் சனிக்கிழமை அதிகாலை கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரம் நீலிக்கொல்லை மசூதி தெருவில் புது தில்லி மத்திய உளவுத்துறை (IB) போலீஸார் மற்றும் வேலூர் ஐ.பி., திருச்சி ஐ.பி., திருப்பத்தூர் கியூ பிரான்ச் போலீஸார் ஆம்பூரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி மாணவரை அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடம் இருந்த விலை உயர்ந்த 2 வெளிநாட்டு செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நீலிக்கொல்லை மசூதி தெரு பகுதியைச் சேர்ந்த மீர்ஹிதாயாத்அலி மகன் அனஸ் அலி வயது (22) என்பவர் ஆற்காடு அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர் என்றும் இவர் வெளிநாட்டில் சிலருடன் தொடர்பில் இருந்ததாக வெளியான ரகசிய தகவலின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் ரகசிய இடத்தில் அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதனால் ஆம்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.