முகப்பு
தமிழ்நாடு

நெரிசல் மிகுந்த நேரங்களில் கூடுதல் மெட்ரோ ரயில்!

நெரிசல் மிகுந்த நேரங்களில் கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 நவம்பர் 2022, 10:53 am IST
பகிர்:

நெரிசல் மிகுந்த நேரங்களில் கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வண்ணாரப்பேட்டை - ஆலந்தூர் இடையே 3 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும். காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும்  3 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும்.

விம்கோ நகர் - விமான நிலையம் இடையே 6 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்பட உள்ளது.

Advertisement

Advertisement

சென்னை சென்ட்ரல் - பரங்கிமலை, சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையே 12 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

வார இறுதி நாள்களில் மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை 2.5 லட்சமாக அதிகரித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.