நவீன் பட்நாயக் பிறந்தநாள்.... முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் பிறந்த நாளையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பிறந்த நாளையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்.
இதையும் படிக்க | தமிழக அரசு நியாய விலைக்கடையில் மாபெரும் வேலைவாய்ப்பு!
Advertisement
Advertisement
இயற்கைப் பேரிடர்களைச் சீரிய முறையில் தாங்கள் கையாள்வதும், விளையாட்டுத் துறைக்கு ஊக்கமளித்து, இளம் திறமையாளர்களை வளர்த்தெடுப்பதும் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.
தாங்கள் நீண்ட காலம் நல்ல உடல்நலத்துடன், ஒடிசா மாநில முன்னேற்றத்துக்காகப் பணியாற்ற விழைகிறேன் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.