FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வாங்காதவர்கள் கணக்கெடுப்பு ஏன்?

தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வாங்காதவர்கள் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்படுவது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 21 செப்டம்பர் 2022, 4:28 pm IST
பகிர்:


சென்னை: தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வாங்காதவர்கள் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்படுவது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழகத்தில் இயங்கும் நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வாங்காதவர்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கு, குடும்பஅட்டை வைத்திருப்போரில் பொருள்கள் வாங்காதவர்களை ஒழுங்குப்படுத்தவே கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. ஒரு வேளை, குடும்ப அட்டை வைத்திருந்து, பொருள்கள் வாங்காவிட்டால் கௌரவ அட்டை வாங்கிக் கொள்ளலாம் என்றும் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வாங்கும் போது சோப்பு உள்ளிட்ட மற்ற பொருள்களை வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது. அவ்வாறு கட்டடாயப்படுத்தும் ரேஷன் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்என்றும் கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments